மற்றுமொரு பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி கைது!

Sunday, April 10th, 2016

பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆந் திகதி தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 130 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான சலா அப்தே சிலாம், கடந்த மாதம் பெல்ஜியம் நாட்டின் தலைநகராக பிரசல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பாரீஸ் தாக்குதலில் தேடப்பட்டு வந்த மற்றொரு தீவிரவாதியான முகமது அப்ரினியும் பிரசல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டுள்ளான்.

அவரது தோற்றம், பிரசல்ஸ் விமான நிலைய தாக்குதலின்போது மாயமான தொப்பி அணிந்த தீவிரவாதியை போன்று இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

பெல்ஜியத்தில் மேலும் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் பிரசல்ஸ் தாக்குதலில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts: