மஞ்செஸ்டர் தாக்குதலுக்கு ஹிலாரி கடும் கண்டனம்!

Thursday, May 25th, 2017

இளைஞர்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலினால் தாம் கடும் சீற்றமும் கோபமும் அடைந்துள்ளதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குழந்தைகள் சுகாதார நிதியத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மஞ்செஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தமது அனுதாபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். மஞ்செஸ்டர் அரீனா பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பெரும்பாலும் சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததுடன், 59 பேர்வரை படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: