ப்ரெக்சிட் விவகாரம்: முதலாவது முயற்சிலேயே தோல்வி!

Thursday, September 5th, 2019

ப்ரெக்சிட் விவகாரத்தில் பிரித்தானிய புதிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன், தமது முதலாவது முயற்சிலேயே தோல்வி அடைந்துள்ளார்.

உடன்படிக்கைகள் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஆளுங்கட்சியின் அதிருப்தியாளர்கள், எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இந்த யோசனையை தோற்கடித்தனர்.

யோசனைக்கு ஆதரவக 301 வாக்குகளும், எதிராக 328 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், ப்ரெக்சிட் விடயத்தை மேலும் தாதப்படுத்துவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், முன்கூட்டிய பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான யோசனையை தாம் முன்வைக்கவிருப்பதாக, பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

Related posts: