பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை திடீர் நிறுத்தம்!

Saturday, December 17th, 2016

சிரியா நகரான அலெப்போவின் கிழக்கு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் மற்றும் போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கையானது தொடங்கிய ஒருநாள் கழித்து நிறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு விளக்கமுமின்றி அந்தப்பகுதியிலிருந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியைக் கண்காணித்து வரும் ரஷ்யாவிடமிருந்து இந்த்த் தகவல் வந்திருக்கலாம் என்று சிரியாவில் உள்ள உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் வெளியேற்றம் நிறுத்தப்பட்டது குறித்து முரண்பாடான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வெளியேற்றப்படும் பொதுமக்கள், பேருந்துகளில் ஏறும் இடங்களில், குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.இராணுவ வாகன அணிவகுப்பு மீது போராளிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அரசுத் தரப்பு கூறுகிறது.

ஆனால், அரசு ஆதரவு பெற்ற படைகள், வெளியேற்றப்படும் பாதையை மூடிவிட்டதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.

_92995587_gettyimages-630056410

Related posts: