பெய்ரூட் வெடிப்புச் சம்பவம்: லெபனான் அரசாங்கம் இராஜினாமா!

Tuesday, August 11th, 2020

லெபனான் தலைநகரம் பெய்ரூட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் அந்நாட்டு அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளது. இந்த அறிவித்தலை நாட்டின் அரச தொலைக்காட்சி ஊடாக பிரதமர் அறிவித்துள்ளார்.
வெடிப்புச் சம்பவம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை உருவாகும் வரை ஒரு பராமரிப்பாளராக இருக்குமாறு ஜனாதிபதி மைக்கேல் அவுன் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெய்ரூட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற பாரிய சம்பவத்தில் 200 இற்கும் அதிகமானோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது

Related posts: