பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்!

Tuesday, March 7th, 2023

பிலிப்பைன்ஸில் நேற்று பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் – மிண்டோனோ மாகாணத்தின் மர்குஷன் நகரில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இதேநேரம் அண்மையில் துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: