பிரித்தானிய பிரதமர் குணமடைய உலக சுகாதார அமைப்பு தலைவர் உட்பட பலர் பிரார்த்தனை!

Tuesday, April 7th, 2020

பிரித்தானிய பிரதமரை கொரோனா வைரச் தொற்றியதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பிரான்ஸ் ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியின் மகளான இவங்கா ட்ரம்ப், தொழிற்கட்சித் தலைவர் ஜெரோமி ஹெர்பன் உட்பட பலர் அவர் குணமடைய வேண்டும் என அவர்களது கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன், ஜோன்சன் இந்நோயிலிருந்து விடுபட்டு மீண்டு வரவேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததோடு நாளை நாட்டு மக்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தி பிரதமரை குணமடையச் செய்தல் வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேநேரம் உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் அவர்களும் பிரித்தானிய பிரதமர் குணமடைந்து மீண்டு வர வாழ்த்துவதோடு மருத்துவ ஊழியர்கள் பிரதமரை குணமடையச் செய்துவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts: