பிரிட்டிஷ் அரசியின் 90 ஆவது பிறந்தநாள்!
Monday, June 13th, 2016
பிரிட்டிஷ் அரசி எலிசபெத்தின் 90 ஆவது பிறந்தநாளை அதிகார பூர்வமாக கொண்டாடும் நிகழ்வின் மூன்றாம் மற்றும் கடைசி நாளில் பத்தாயிரம் பேர் கலந்துகொள்ளும் வகையில், மத்திய லண்டனில் பெரும் விழா நடைபெறவிருக்கிறது.
ராணி தொடர்பு கொண்டிருக்கும் லண்டன் மற்றும் காமன்வெல்தில் அங்கம் வகிக்கும் நாடுகளை சார்ந்த அறுநூறுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களின் பணிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமையும் மதிய விருந்தில் எலிசபத் ராணி மற்றும் மூத்த அரச குடும்பத்தினர் கலந்துகொள்ள உள்ளனர்.
பிரிட்டனின் தட்ப வெட்ப நிலையை சரியாக கணிக்க முடியாததால் 500 லிட்டர் சன்ஸ்கீரிம் மற்றும் மழையில் நினையாமல் இருப்பதற்கான பன்னிரெண்டாயிரம் அங்கிகள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தயார் நிலையில் வைத்துள்ளனர் .
இந்த நிகழ்விற்கான நுழைவுச் சீட்டின் கட்டணம் 200 டாலருக்கும் மேலாக இருப்பது குறித்தும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக டெண்டர் விடப்படாமல் ராணியின் பேரன் பீட்டர் பிலிப்ஸ் இந்த நிகழ்வை நடத்துவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Related posts:
|
|