பிரான்ஸ் பொலிஸ் அதிகாரி மரணம்!

Saturday, March 24th, 2018

பிரான்சின் தென் பகுதியான ரிபெஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்திருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்தத் தாக்குதலில், காவல்துறை அதிகாரி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது படுகாயமடைந்த பிரான்ஸ் போலிஸ் அதிகாரி இறந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியின் மறைவு குறித்து “ஒரு அசாத்திய தைரியம் வீழ்த்தப்பட்டுள்ளது ” என  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோன் தெரிவித்ததுள்ளார்.

இதனிடையே குறித்த பொலிஸ் அதிகாரியின் மறைவு குறித்து உள்துறை அமைச்சர் ஜெரார்ட் காம்போம் தனது ட்விட்டரில் பதிவில் “அவர் தனது நாட்டிற்காக இறந்துவிட்டார், பிரான்சும் அவரது வீரத்தை மறக்க மாட்டாது என்று பதிவிட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிதாரியான 25 வயதான ரெடானேன் லாக்கிம்  மூன்று  பொது மக்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

_100551111_dzbxhdqwkaedeme