பிரான்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Wednesday, February 6th, 2019

பிரான்ஸ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2 தளங்களிலும் உள்ள வீடுகளில் தீ பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டதனை தொடர்ந்து தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதும், வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: