பாரிஸ் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு –  தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்!

Monday, May 14th, 2018

பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஜனாதிபதி எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இரத்தத்துக்கான விலையை பிரான்ஸ் மீண்டும் கொடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பாரிசில் நடந்த கத்திக்குத்து தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பின் வலைத்தளத்தில், பாரிஸ் தாக்குதலுக்கு எங்கள் அமைப்பு தான் மூளையாக செயல்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

fran _101522292_ppppp

Related posts: