பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல்!

Monday, May 7th, 2018

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசான் இக்பாலை இலக்கு வைத்து துப்பாக்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பேரணி ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்  அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினராகக் காணப்படும் உள்துறை அமைச்சர் ஹசான் இக்பால்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கித் தாக்குதலை மேற்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: