பலியானோரின் எண்ணிக்கை உயர்வு!

Sunday, December 8th, 2019

ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானோரின் தொகை 20 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இவ்வாறு காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றும் பல மணிநேரம் கடந்துள்ள நிலையில் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை.

குறித்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் அந்த நாட்டு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: