பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்திற்கு சீனா ஒப்புதல்!

Saturday, September 3rd, 2016

கடந்த ஆண்டு பாரிஸில் எட்டப்பட்ட பருவகால மாற்றத்தை சமாளிப்பதற்கான உலக ஒப்பந்தத்துக்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் ஹாங்சொள நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் ஜி 20 நாடுகள் மாநாட்டை முன்னிட்டு, சீன நாடாளுமன்ற நிலைக்குழு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக கொண்டுள்ளது.

அமெரிக்காவும் இந்த ஒப்பந்தத்தில சேர்வதை உறுதிசெய்ய இருப்பதால், அதிபர் பராக் ஒபாமாவும், சீன அதிபர் ஷி ஜீங்பிங்கும் பின்னர் கூட்டாக அறிக்கை வெளியிடலாம் என தெரிகிறது. உலக அளவில் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவில் மொத்தம் 55 சதவீதத்தை வெளியேற்றுகின்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைகின்றபோதுதான் கரியமில வாயு வெளியேற்ற அளவை கட்டுப்படுத்துகிற இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

151129134520_greenhouse_gas_emission_climate_change_640x360_bbc_nocredit

Related posts: