படகு கவிழ்ந்து விபத்து – கொங்கோவில் 11 பேர் உயிரிழப்பு!

Thursday, August 8th, 2019

கொங்கோ நாட்டில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த படகு 77 பயணிகளோடு அதிக பாரம் கொண்ட சரக்குகளையும் ஏற்றி சென்றமையே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் மீட்பு குழுவினர் வருவதற்கு முன்னர் தண்ணீரில் மூழ்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts: