நைஜீரியாவில் கடும் மழை  – 100 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 18th, 2018

அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியா நாட்டில் பெய்த கடும் மழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.

தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் குறித்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

Related posts: