தென் ஆபிரிக்கா ஆளும் கட்சிக்குள் நிலவிவந்த சர்ச்சை ஓய்ந்தது!
Tuesday, November 1st, 2016தனது சகா ஒருவருக்கு ஓய்வூதிய திட்டம் ஒன்றை வழங்குவதற்காக தவறான நடவடிக்கையில் ஈடுபட்டார் என குற்றஞ்சாட்டப்பட்ட தென்னாபிரிக்காவின் நிதித்துறை அமைச்சர் பிரவின் கோர்தனுக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், கோர்தன் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட எண்ணவில்லை என்று தான் முடிவுக்கு வருவதாக வழக்கறிஞர் ஷான் ஆப்ரஹாம்ஸ் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் நிதி அமைச்சர், தனக்கு எதிரான இந்த வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளார். ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் உள்ள முன்னணி பிரபலங்கள் இடையே ஏற்பட்ட தொடர் மோதல்களை அடுத்து இந்த வழக்கு பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முத்துக்குமார் எழுதிய மனதை கலங்க வைக்கும் கடிதம் !
பள்ளிவாசல் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்.
பாவ மன்னிப்பு கோரிய பெண்ணுக்கு பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம்!
|
|