துணைப் பிரதமரின் தெரிவு சட்ட ரீதியற்றது – அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம்!

Saturday, October 28th, 2017

அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தெரிவு சட்ட ரீதியற்றது என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

அவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்ததாலேயே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் பார்னபி ஜோய்சி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் குடியுரிமையை பெற்றுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்பல்லின் அரசாங்கம் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: