தாய்லாந்தை தாக்கவுள்ளது பாரிய சூறாவளி!

தாய்லாந்தின் தென் பிராந்தியத்தை கடும் மழையுடனான பாரிய சூறாவளி ஒன்று தாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகையான வலுவான சூறாவளி ஒன்று 30 வருட காலத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ளதாக தாய்லாந்தின் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நக்கோன் சி தமரட் மாகாண நிலப்பரப்பை தாக்கிய சூறாவளி தாய்லாந்தின் தென்பிராந்தியத்தை ஊடறுத்து நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சூறாவளி பயணிக்கும் பகுதிகளில் பல பிரபல சுற்றுலா மையங்கள் உள்ளன.
இந்த நிலையில், ஏற்கனவே பல சிறிய தீவுகளில் உள்ள ஆயிரக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
தீவின் சுற்றுலா மையங்களில் உள்ள சுற்றுலா பயணிகளை தமது விருந்தகங்களை விட்டு வெளியேற வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வருடத்தின் ஆரம்ப கால பகுதியில் சுற்றுலா பயணிகள் தாய்லாந்தின் குடா தீவுகளுக்கு விஜயம் செய்வது அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் சூறாவளி தாக்குதலுக்கு உள்ளாகி பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
தற்போது, அப்படியான நிலை ஏற்படாது என தெரிவித்துள்ள அதிகாரிகள் அதற்கு ஏற்ற மாற்று பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் மீட்பு பணியாளர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
|
|