தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேர்தல் திகதி அறிவிப்பு!

Sunday, September 25th, 2016

தமிழகத்தில் ஒக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக தேர்தல் ஆணையர் சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார்.உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை (26.09.16) முதல் தொடங்கும்.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் அக்டோபர் 3.. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறுவுள்ளது.அக்டோபர் 6-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

91,098 வாக்குச்சாவடிகளில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவில், மாநிலம் முழுதும் உள்ள 5.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

_91373773_voting

Related posts: