தமிழகத்தில் பேருந்து  ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

Friday, January 5th, 2018

சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னையில் நேற்று(04) 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. ஆனால், பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடித்தது.

இதன் காரணமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமைச்சர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் நேற்று(04) இரவு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டன. தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன.

எனவே பேச்சுவார்த்தையில் இருந்து தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியேறி அதிகாரபூர்வ வேலைநிறுத்த அறிவிப்பை நேற்று(04) இரவு வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று(05) தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: