தகுதியற்றவர் டிரம்ப் –  எப்.பி.ஐ.குற்றச்சாட்டு!

Wednesday, April 18th, 2018

அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப் என அமெரிக்க புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஹிலாரி கிளிண்டன் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரியை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இ-மெயில்களை ஹிலாரி நீக்கினார் என குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து விசாரிக்க அப்போதைய எப்.பி.ஐ இயக்குனர் ஜேம்ஸ் கோமி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் ஹிலாரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டது.டிரம்ப் அதிபரான பின், எப்.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து கோமி நீக்கப்பட்டார்.

இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு ஜேம்ஸ்கோமி அளித்த பேட்டியில், அதிபராக இருப்பவர், நாட்டின் முக்கியத்துவங்களை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். மருத்துவரீதியாக தகுதியானவரா என்பது 2ம் பட்சம் தான். ஆனால் மனரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் டிரம்ப் அந்த பதவிக்கு தகுதியற்றவர், என்றார்.

Related posts: