டெபி புயலின் தாக்கம்: அவுஸ்திரேலியாவின் பல பிரதேசங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை!

Wednesday, March 29th, 2017

டெபி சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் வட கிழக்குப் பிரதேசங்களுக்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தை தாக்கிய கடும் சூறாவளியினால் 250 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதை தொடர்ந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து பிராந்தியத்தில் இடம்பெற்ற பேரழிவு சூறாவளியினால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 23,000 குடியிருப்புக்களுக்கான மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இதன்போது மணித்தியாலத்திற்கு சுமார் 260 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளதுடன் பல இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அனர்த்த நிவாரண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய இராணுவம் மற்றும் அவசர உதவிக் குழுக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தில் இதுவரையில் எவ்வித உயிரிழப்புகளும் பதிவாகவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts: