டிஜிட்டல் வானொலிக்கு மாறியது நோர்வே!

நோர்வேயிலுள்ள பண்பலை ( எஃப்.எம்) வானொலி வலையமைப்புக்களை நிறுத்தி டியிஜட்டல் முறையிலான வானொலி சேவை நடைமுறை நேற்றுப் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உலகிலேயே நோர்வேதான் பண்பலை வானொலி வலை அமைப்புகளை நிறுத்தும் முதல் நாடாகிறது.
நார்வே, அங்குள்ள வானொலி வலையமைப்பை, மொத்தமாக டிஜிட்டல் ஒலிபரப்பாக மாற்றுகிறது. டி.ஏ.பி எனப்படும் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பு தொழில்நுட்பம் மேம்பட்ட தரம் மற்றும் சென்று சேரும் பரப்பளவு அதிகமானதாகவும் இருப்பதுடன், மலிவானதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பொன்று, நார்வே நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர், இந்த நடவடிக்கைக்கு எதிராக இருப்பதாகக் காட்டியது. நார்வேயில் உள்ள கார்களில் பெரும்பாலானவற்றில் டிஜிட்டல் ஒலிபரப்பு வசதி இல்லை என்பது இதற்கு ஒரு காரணமாகும்.
இந்த எஃப் எம் சேவைகள் நிறுத்தம் என்பது வடக்கு நகரான போடேவில் தொடங்கி , பின்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடெங்கிலும் நிறுத்தப்படும். ஆனாலும், சமூக வானொலி நிலையங்கள் மேலும் ஐந்தாண்டுகளுக்கு செயல்பட அனுமதிக்கப்படும்.
Related posts:
|
|