ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு!

Monday, June 6th, 2016

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதி சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் நடைபெறும் என அவரது குடும்ப செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று முறை உலக ஹெவி வெயிட்சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகமது அலி தனது 74வது வயதில் நேற்று காலமானார். அவரின் மறைவால் உலகம் முழுவதும் உள்ள அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் முகமது அலியின் இறுதி சடங்குகள் வரும் வெள்ளிக்கிழமையன்று இஸ்லாமிய முறைப்படி நடைபெறவுள்ளது எனவும், மேலும் அவரது உடல் சொந்த ஊரான லூயிஸ்வில்லியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கேவ்ஹில்லில் அடக்கம் செய்யப்படும் என்றும் முகமது அலியின் குடும்ப செய்தி தொடர்பாளர் பாப் கனலி தெரிவித்துள்ளார்.

இறுதி சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், நகைச்சுவை நடிகர் பில்லி கிரிஸ்டல் ஆகியோர்பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Related posts: