ஜப்பானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மூழ்கியது – இந்து சமுத்திரத்தில் பாரிய எண்ணெய் கசிவு!

Tuesday, August 11th, 2020

இந்து சமுத்திரத்தில் மொரிஷியஸ் தீவிற்கு அருகில் கடந்த 25 ஆம் திகதிமுதல் மூழ்கிக்கொண்டிருந்த ஜப்பானின் எண்ணெய் கப்பலிலிருந்து ஆயிரத்திற்கு அதிகமான டொன் எண்ணெய் இந்து சமுத்திரத்துடன் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு சொந்தமான வகஷியோ என்ற எண்ணெய் கப்பல் 4000 தொன் எடை கொண்ட எண்ணெய்யை சுமந்து சென்ற நிலையில் இந்து சமுத்திரத்தில் மூழ்கியது.

இந்நிலையில் குறித்த கப்பலில் காணப்பட்ட எண்ணெய்யை அகற்றிக்கொள்வதற்கு முயற்சித்த போதிலும் 500 தொன் எண்ணெய் மாத்திரமே அகற்றப்பட்டதாகவும், காலநிலை காரணமாக அகற்றமுடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஞ்சியுள்ள எண்ணெய் கசிவடைந்து இந்து சமுத்திரத்தில் கலந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: