சோமாலிய குண்டுத்தாக்குதலில் 276 பேர் பலி!  

Tuesday, October 17th, 2017

சோமாலிய தலைநகர் மொகடிஷூவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

காயமடைந்தவர்களில் பலர் துருக்கிய வாநூர்தி மூலம் எடுத்துச் செல்லப்பட்டு துருக்கிய மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சோமாலியாவில் இஸ்லாமிய அல் ஷபாப் குழுவினர்இ கடந்த 2007ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களில் இதுவே பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

ஜனாதிபதி மொகமட் அப்துல்லாஹி மொகமட் தாக்குதல் நடத்தியவர்கள் மனிதாபிமானம் அற்ற மிகவும் கொடியவர்கள் என தெரிவித்துள்ளார்.அனர்த்தம் இடம்பெற்று இரண்டு நாளான போதிலும்இ தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவினரும் உரிமை கோரவில்லை

Related posts: