சுவிஸ் அணு உலைகளை மூட மக்கள் எதிர்ப்பு?

Monday, November 28th, 2016

சுவிசர்லாந்தில் அணுமின் நிலையங்களை மூடுவதற்கான ஒரு கடுமையான கால அட்டவணையை அறிமுகம் செய்வதற்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு முறையான தேதியை குறிப்பிடாமல் ஐந்து அணுமின் நிலையங்களை மூடுவதற்கு சுவிஸ் அரசாங்கம் திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்தே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 45 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் உள்ள எந்த அணு உலையும் இயங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று சுற்றுசூழலியலாளார்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

அவ்வாறு பார்க்கையில், குறைந்தது இரு மின் நிலையங்களை உடனடியாக மூட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவாக அணுமின் நிலையங்களை மூடுவது மின் தட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் என்று வர்த்தக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

_92682421_gettyimages-626082502

Related posts: