சுற்றுலா சென்ற பேருந்து தீப்பிடிப்பு – 26 பேர் உடல் கருகி பலி!

Saturday, March 23rd, 2019

சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்து வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், 28 பேர் காயமடைந்தனர்.

விபத்து தொடர்பாக பேருந்தின் இரண்டு சாரதிகளையும் பொலிசார் கைது செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: