சீன ஜனாதிபதி வடகொரியாவிற்குப் பயணம்?

Wednesday, April 18th, 2018

சீனாவின் ஜனாதிபதி க்சி ஜின்பிங் வடகொரியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக ஜப்பானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வடகொரியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதிக்கும் வடகொரிய தலைவருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று விரைவில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பை அடுத்து எதிர்வரும் ஜுன் மாதத்துக்குப் பின்னர் சீன ஜனாதிபதி வடகொரியாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: