சீனாவில் மக்கள் தொகை குறைவடைந்து வரும் நிலையில்!

Saturday, January 5th, 2019

உலகிலேயே மிகவும் அதிக சனத்தொகையை கொண்ட நாடான சீனாவில் தற்போது மக்கள் தொகை குறைவடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தைஎன்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே இதற்குக் காரணமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் இறப்பு விகிதம் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. இதேநேரம், பிறப்பு விகிதம் 12 லட்சத்து 70 ஆயிரமாக மிகவும் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2029 ஆம் ஆண்டில் சீனாவின் சனத்தொகை 144 கோடியாக இருக்கும் என்றும், 2050 ஆம் ஆண்டில் அது 136 கோடியாக குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: