சீனாவின் போர் ஒத்திகைகள் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகின்றன – அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு!

Wednesday, April 12th, 2023

தாய்வானிற்கு அருகில் சீனா மேற்கொண்டுள்ள  போர் ஒத்திகைகள்  ஸ்திரமின்மையை  ஏற்படுத்துகின்றன என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார்.

சீனா சர்வதேச தலைவர் போன்று செயற்படுவதன் அவசியத்தையும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய நிலை தொடர்ந்து பேணப்படவேண்டும் நீடிக்கவேண்டும் என்பதையே அவுஸ்திரேலியாவிற்காகவும்  பிராந்தியத்திற்காகவும் நாங்கள் தெரிவிக்கவிரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலை ஒருதலைப்பட்சமாக மாற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இதற்காக குரல்கொடுக்கும் பதற்றதணிப்பு குறித்து நாங்கள் தொடர்ந்தும் குரல்கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா பார்லி மீது விதித்த வரிகள் நியாயப்படுத்த முடியாதவை என குறிப்பிட்டுள்ள  அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இந்த தடையை விரைவில் முடிவிற்கு கொண்டுவருவதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வரியை நீக்குவது குறித்து ஆராய்வதை துரிதப்படுத்த  சீனா இணங்கியுள்ளமை சிறந்த விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: