சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட வேண்டும் – இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023

நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தும் வகையில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும் என இந்திய பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமரின் வாழ்த்து செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாக அமையட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: