சசிகலா அவுட்: ஓ.பி.எஸ் கைக்கு மாறியது அதிகாரம்!
Wednesday, September 13th, 2017
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவருக்கு இருந்த அ.தி.மு கட்சியின் முழு அதிகாரம் தற்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அ.தி.மு கட்சியின் நிர்வாகிகள் அவரையே கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக அழைத்து வந்தனர்.எனினும், ஜெயாவின் மறைவிற்கு பின்னர் அந்த அதிகாரம் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவிடம் இருந்தது.
பின்னர் துணைப்பொது செயலாளர் டிடிவி தினகரனுக்கு வழங்கப்பட்டது.இந்நிலையில், இன்றைய தினம் அ.தி.மு கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.அந்தவகையில், அ.தி.மு கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு விட்டதாகவும், அதற்கு இணையாக தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பொதுச்செயலாளர் பதவிக்குரிய அனைத்து அதிகாரங்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் அ.தி.மு கட்சியின் அதிகாரமிக்கவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இணை தலைமை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
|
|