சசிகலாவின் அண்ணன் மகன் மரணம்!

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன், இன்று திடீரென மரணம் அடைந்தார். திருவிடைமருதூர் கோயிலுக்குச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வயது 47.
சசிகலாவின் 2வது அண்ணன் வினோதகன். இவரது மகன் மகாதேவன். தஞ்சாவூரில் வசித்து வந்த மகாதேவன், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில், மகாதேவன் இன்று காலை திருவிடைமருதூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மகாதேவனை உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அப்போது, போகும் வழியில் மகாதேவன் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மகாதேவன் மரணம் அடைந்த தகவல் உடனடியாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. பரோலில் அவர் வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Related posts:
|
|