கொரோனா வைரஸ் – தென் சுவிற்சர்லாந்திலும் அவசரகாலநிலையில்!
Tuesday, February 25th, 2020கொரோனா நுண் கிருமி சுவிற்சர்லாந்தின் எல்லையை வந்தடைந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் சுவிற்சர்லாந்து தனது முதன்மை சுற்றுலா பயணிகளான சீனர்களுக்கு நாட்டுக்குள் நுழைய தடைவிதித்திருந்தது.
அதன் அடுத்த கட்டமாக சீனாவின் இறக்குமதியையும் தபால் போக்குவரத்தையும் தடை செய்தது. ஓரளவேனும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்னகர்வுகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் சுவிசின் எல்லைக்கு அருகே இத்தாலியில் கொரோனா தாக்கத்துக்குள்ளானோரால் புதுப்பிரச்சனை எழுந்துள்ளது. இதனையடுத்து தென் சுவிற்சர்லாந்து அவசரகாலநிலையில் உள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரஷ்யாவுக்கு உதவினால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் - சீனாவை கடுமையாக எச்சரித்த அமெரிக்கா!
குறுகிய காலத்துக்குள் தொழில் நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஒரு இலட்சம் இலங்கையர்கள்!
2048 - பசுமைப் பொருளாதார வேலைத்திட்டத்திற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு ஜனாதிபதிக்கு பல நாடுகளின்...
|
|