கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு – 7 பேர் உயிரிழப்பு!

Wednesday, January 9th, 2019

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெக்சிகோவின் கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பிளயா டெல் கார்மன் உள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: