காஷ்மீரில் பாரிய துப்பாக்கித்  தாக்குதல்!

Tuesday, April 3rd, 2018

இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய தகவல்கள்தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கித் தாக்குதல்கள் காஷ்மீரின், சோபியான் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில் இடம்பெற்றன.

தீவிரவாதிகள் சிலர் மறைந்திருப்பதாக காவற்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே, அந்த பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

உயிரிழந்தவர்களில் நான்கு பொதுமக்களும் உள்ளடங்குகின்றனர்.இந்தநிலையில், குறித்த பகுதியில் தொடர்ந்தும் பதட்டம் நிலவுவதுடன், அங்குள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts: