காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தம்!

Monday, November 6th, 2023

காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து இஸ்ரேலிய அரசாங்கம் கடும்கண்டனங்களை எதிர்கொண்டது.

பெஞ்சமின் நெட்டன்யாகுவின் கலாசார அமைச்சரும் அதிதீவிரவாத அரசியல்வாதியுமான  அமிச்சே எலியாகு பாலஸ்தீன பிரதேசங்கள் மீது இஸ்ரேலின் பதிலடி குறித்து தான் திருப்தியடையவில்லை  என குறிப்பிட்டுள்ளார்.

காசாபள்ளத்தாக்கை மீண்டும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்துவதை அவர் ஆதரித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களின் நிலை குறித்த கேள்விக்கு அவர் அவர்கள் அயர்லாந்திற்கு செல்லலாம் அல்லது பாலைவனம் செல்லலாம் என தெரிவித்துள்ளார்.

காசாவில் உள்ள அரக்கர்கள் தங்களிற்கான வழியை கண்டுபிடிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

காசா பள்ளத்தாக்கிற்கு உயிர்வாழ உரிமையில்லை  என தெரிவித்துள்ள அமைச்சர் ஹமாஸ் பாலஸ்தீன கொடியை ஏந்துபவர்கள் எவரும் உயிர்வாழ தகுதியுடையவர்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: