கவச வாகனங்களின் பயன்பாடு ஆரம்பித்து 100 ஆண்டுகள் பூர்த்தி!

Friday, September 16th, 2016

உலகளவில் போர்க்களத்தில் கவச வாகனஙகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டு நூறாண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.

முதலாம் உலகப் போரில்தான் கவச வாகனங்கள் போர்க்களங்களில் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டன.

வடக்கு பிரான்ஸில் பயன்படுத்தப்பட்ட முதல் யுத்த டாங்கியின் மாதிரி ஒன்று மத்திய லண்டனிலுள்ள ட்ரஃபால்கர் சதுக்கத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இரகசியமாகத் தயாரிக்கப்பட்ட யுத்த டாங்கிகள், அகழிகள் வெட்டப்பட்டு முன்னேற முடியாமல் தவித்த பிரிட்டிஷ் படையினருக்கு உதவ சோம் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது.

அப்படி பயன்படுத்தப்பட்ட பல டாங்கிகள் செயலற்று போனாலும், மூன்றில் ஒரு பங்கு ஜெர்மனிய இராணுவ நிலைகளை உடைத்துக் கொண்டுச் சென்றன.டாங்கிகளின் கண்டுபிடிப்பு நிலப்பரப்பில் நடைபெறும் போர் முறைகளை முற்றாக மாற்றியமைத்தது.

_91212837_c9882ad1-fe27-463e-abaf-c764fc670d39

_91212836_34514b0d-11fa-4083-af32-7fe1b6dc6a6f

Related posts: