கலைஞர் கருணாநிதிக்கு தொடர்ந்தும் சிகிச்சை: காவேரி மருத்துவமனையில் முக்கிய  பிரமுகர்கள்!

Monday, July 30th, 2018

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் திரண்டுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை ஞாயிற்றுக்கிழமை மாலை சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் திமுக தொண்டர்கள் அதிகளவில் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையடுத்து கருணாநிதி உடல்நலம் சீரான நிலையில் தொடர்வதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில், காவேரி மருத்துவமனைக்கு காலை முதல் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க மீண்டும் வருகை தந்தனர். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து விசாரித்தனர். பின்னர் கருணாநிதியை தானும், ஓ.பன்னீர்செல்வமும் நேரில் பார்த்ததாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related posts: