கறுப்பு பட்டியலில் உள்ளீர்க்க நேரிடும் – பாகிஸ்தானுக்க எச்சரிக்கை!

Saturday, June 22nd, 2019

ஐக்கிய நாடுகளினால் நியமிக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாட்டுத் திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் உள்ளீர்க்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிதி செயற்பாட்டு பணிக்குழுவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய இராஜதந்திரிகளை மேற்கோள்காட்டி NDTV தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த விடயத்தில் பாகிஸ்தானைப் பாதுகாக்க சீனா நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதிலும், அந்த நாட்டுக்கான இறுதி எச்சரிக்கையை சீனா எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய கண்காணிப்புக் குழு ஏற்கனவே பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் போதிய கட்டுப்பாடுகளைக் கொண்ட நாடுகளின் முன்னோடி பட்டியலில் பாகிஸ்தானை இணைத்துள்ளது

எனினும், அது நிதி செயற்பாட்டு பணிக்குழுவினால் கருப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டால்,  உலகலாவிய தடைகளை எதிர்கொள்ளும் அபாயத்தை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இறுதி செயல் திட்ட உருப்படிகள் காலாவதியாகும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் தனது செயல் திட்டத்தை விரைவாக நிறைவுசெய்யுமாறு வலியுறுத்துவதாக நிதி செயற்பாட்டு பணிக்குழு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: