கடும் பனியால் 100க்கு மேலானோர் பலி!

Monday, February 6th, 2017

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ள வழக்கத்திற்கு மாறான கடும் பனிப்பொழிவால், அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவால், ஒரு நாளைக்குள் 60 பேருக்கு அதிகமானோர் இறந்தது உள்பட, அந்நாட்டில் 100 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

இந்துகுஷ் மலைத்தொடர் வழியாக செல்லும் சலாங் சுரங்கப்பாதையில், டஜன்கணக்கான ஓட்டுநர்கள் உணவு அல்லது சுகாதார வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

அதிக குளிரால் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் காபூலில் பனிப்பொழிவால் சில கட்டடங்கள் தரைமட்டமாகியிருக்கும் நிலையில், சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள இமயமலை பகுதிகளில் ஏற்பட்ட பனிச்சரிவில் குறைந்தது 10 பேர் இறந்துள்ளனர்.

_93969999_b8c18ba5-ab64-4ce4-96ab-98cc07a69963

Related posts: