கடத்தலில் ஈடுபட்டால் மரணதண்டனை- இந்தியாவில் புதிய சட்டம்!

Friday, July 7th, 2017

விமான கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்வரப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டம் கடந்த 2016 ஆண்டில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. எனினும் அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படாததால் நடைமுறைக்கு கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

குறித்த சட்டத்தின் பிரகாரம், விமானகடத்தல் இடம்பெறும்போது விமானத்திலோ அல்லது விமானம் தரையிறக்கப்பட்ட பின்னரோ உயிரிழப்பு ஏற்பட்டால் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும்.

மேலும் விமானம் புறப்பட்டதிலிருந்து தரையிறங்கி 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டாலும் இந்த சட்டத்தின் பிரகாரம் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: