ஒபாமாவை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு !

Wednesday, March 9th, 2016

அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ இந்த மாதத்தின் பிற்பகுதியில் வாஷிங்டன்னிற்கு  செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசவும், அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் தொழில் அதிபர்களை சந்தித்து கலந்துரையாடவும் எண்ணி இருந்தார். ஈரானுடன் அமெரிக்கா கடந்த ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்தது. இதை ஈரானின் எதிரியான இஸ்ரேல் எதிர்த்தது.அந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை வழங்கும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா கடைபிடித்துவரும் தாமதமும் இஸ்ரேல் பிரதமருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனை இஸ்ரேல் செய்திகளை மேற்கொள்கோட்டி அமெரிக்க ஜனாதிபதி மாளிகை தெரிவித்தது

Related posts: