ஐ.நா. அமைதிகாப்புப் படையினர் மீது குற்றச்சாட்டு!

Wednesday, August 17th, 2016

தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவிலுள்ள வெளிநாட்டு உதவி பணியாளர்களின் வளாகம், கடந்த மாதம் அரசு படையினரின் சீருடை அணிந்திருந்தவர்களால் முற்றுகையிடப்பட்டபோது, அந்த பணியாளர்களை மீட்பதற்கு தெற்கு சூடானிலுள்ள ஐநா அமைதி பாதுகாப்பு படை தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

தாங்கள் பல மணிநேரம் பிடித்து வைத்து தாக்கப்பட்டதாகவும், பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகவும், ஆண்கள் அடித்து தாக்கப்பட்டதாகவும் உயிர் தப்பியோர் கூறுகின்றனர். தெற்கு சூடான் பத்திரிகையாளர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

இந்த வளாகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற அமெரிக்கத் தூதரகம் மற்றும் ஐநா அமைதிப்காப்பு படையினருக்கு விடுக்கப்பட்ட உதவிக்கான அழைப்பிற்கு பதில் அளிக்கப்படவில்லை என்று உயிர் தப்பியோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் இந்த கூற்றுக்கள் தொடர்பாக அமெரிக்காவும், ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பும் கோபத்தை வெளியிட்டுள்ளன.

இந்த ஆயுததாரிகள் அரசுப்படைப் பிரிவை சேர்ந்தவர்கள் என்ற அனுமானத்திற்கு வருவதற்கு இது பொருத்தமான காலம் அல்ல என தெற்கு சூடான் கூறியிருக்கிறது.

Related posts: