ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் இராஜினாமா – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Wednesday, November 1st, 2023

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது இராஜினாமா குறித்து அவர் அளித்துள்ள கடிதத்தில், இஸ்ரேல் – காஸா மீதான தொடர் போர் குறித்தி அதிருப்தி வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரிடம் இயக்குநர் கிரேக் நேரடியாகவே கடிதத்தை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாட்களாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவரது இராஜினாமாவானது, பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளதோடு, இவரின் செயல் பொறுப்பற்றது எனவும் பல ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

தற்போது, இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸை அடியோடு அழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.

அதற்காக, காஸா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், தனது இராஜினாமா கடிதத்தை வழங்கி ஒரு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேர்தலை நடத்துவதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் தேவை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கு வசதி - 2023 முதல் புதிய நடைமுறை என...
மின்கட்டண அதிகரிப்பு - அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங...