எல்லா பாகிஸ்தானியனும் கோழை அல்ல – சமாதனத்திற்கு இம்ரான் கான் அழைப்பு!

Saturday, October 1st, 2016

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இம்ரான் கான்.அவர் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இம்ரான் கான் தன்னுடைய கட்சியின் பிரசார கூட்டத்தில் பேசும் போது இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே போர் ஏற்படாமல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நட்பு கொள்வதற்கு பாகிஸ்தானியர் தயாராக உள்ளனர் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சமாதான அழைப்பு விடுத்து உள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது:-எங்களுக்கு அமைதி வேண்டும்.நாங்கள் உங்களுடன் நட்பு வைத்து கொள்ள தயாராக உள்ளோம்.போர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் உங்களிடம் சமாதானம் செய்து கொள்கிறோம்.

நான் இந்தியாவில் மோடியை சந்தித்த போது  ஒரு சிறிய மக்கள் கூட்டம்  இந்தியா -பாகிஸ்தானிடையே  நடைபெறும் சமாதான வழிவகைகளை கவிழ்க்க முயற்சி செய்யலாம் என கூறி உள்ளேன். ஆனால் உரி சம்பவம் நடந்த போது இந்தியா விசாரணை இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தியது. மற்றும் மோடி பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுப்பது தொடங்கியது.
இந்தியா தண்ணீர்  விவகாரம் மற்றும் சர்ஜ்க்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை  நிறுத்தாமல் பேச முடியாது. எந்த ஒரு ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் ராணுவத்திற்கு பின்னால்  பாகிஸ்தான் ஒற்றுமையாக உள்ளது.

நவாஸ் செரீப்பை போன்று எல்லா பாகிஸ்தானியனும் கோழை அல்ல.நவாஸ் செரீபுக்கு பணத்தின் மீது காதல் உண்டு. ஐக்கிய நாடுகள் பொது சபையில் செரீப் தயக்கத்துடன்  காஷ்மீர் ஆதரவு உரையை நிகழ்த்தினார்.

மோடி கூறினார் நவாஸ் செரீப் இந்த உரையை நிகழ்த்த விரும்பவில்லை ஆனால் ராணுவ தளபதி  ரகீல் செரீப் அழுத்தம் காரணமாக பேசி உள்ளார்.பாகிஸ்தான்  போர் என  முடிவெடுத்தால் இந்தியா இன்னும் இழப்பை சந்திக்க நேரிடும். இந்தியா ஒளிர்கிறது என்ற மோடியின் கனவு நிறைவேறாது.

நாங்கள் எங்கள் தார்மீகத்தை தொடருவோம்.காஷ்மீரிகள் சுதந்திரத்திற்காக எங்கள் அரசியல்  ஆதரவை அளிப்போம். இந்து மற்றும் மற்றும் கிறிஸ்துவர்கள் உரிமை மறுக்கபட்டால் அவர்களுக்காக எங்கள் குரல் ஒலிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Imran_Khan

Related posts: