உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

Sunday, May 16th, 2021

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள உள்ளூர் அளவிலான ஊரடங்குகளை அமுல்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா பாதிப்புகள் குறித்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பிரதமர், பாதிப்பு அதிகமுடைய மாநிலங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஊரடங்கை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அங்கன்வாடி மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்குமாறும் அவர் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர்,  ஒட்சிசன் கையிருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

உபரியாக பயன்படாமல் சில மாநிலங்களில் இருக்கும்  ஒட்சிசனை தேவை இருக்கும் பகுதிகளுக்கு விநியோகிக்குமாறும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Related posts: