உலங்குவானூர்தி ஊழல்: இத்தாலிய நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு சிறை!

Saturday, April 9th, 2016
இத்தாலியின் பாதுகாப்பு-தொழில்நுட்ப நிறுவனமான ஃபின்மெக்கானிக்காவின் (Finmeccanica) முன்னாள் தலைவர் ஜூஜெப்பே ஓர்ஸிக்கு, தவறாக கணக்குக் காட்டியமை மற்றும் ஊழல் ஆகிய குற்றங்களுக்காக, நாலரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு 12 உலங்குவானூர்திகளை விற்பதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் நடந்த விசாரணைகளின் முடிவில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஃபின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லாண்ட் -இன் (AgustaWestland) தலைவர் புருனோ ஸ்பாங்னோலீனி-க்கும் (Bruno Spagnolini) நான்காண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஓர்ஸி மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். 75 கோடி டாலர் மதிப்பிலான இந்த உலங்குவானூர்திகளை விற்பனை ஒப்பந்தத்தை பெறுவதற்காக குறித்த நிறுவனம் லஞ்சம் வழங்கியுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுக்களுக்கு நடுவே, இந்தியா அந்த ஒப்பந்தத்தை 2014-ம் ஆண்டு ஜனவரியில் ரத்துசெய்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: